அம்மா » சமையல் » கத்தரிக்காய் சாப்ஸ்

கத்தரிக்காய் சாப்ஸ்

11-08-16 13:20 0 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை-

1. கத்தரிக்காய் – 12 (நல்ல பிஞ்சாக எலுமிச்சங்காயளவில்)
2. புளி – 1 எலுமிச்சை அளவு
3. மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
4. தேங்காய் – அரை மூடி
5. கசகசா – 1 தேக்கரண்டி
6. வெங்காயம் – 2 (பெரியது)
7. எண்ணெய் – 100 கிராம்
8. உப்பு – தேவையான அளவு

செய்முறை-

கத்தரிக்காய்களை நீரில் நன்றாக கழுவி காம்பை நீக்கி, ஒரு அங்குல நீள அளவுக்கு (முழுசாக) நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் நன்றாக நீளமாக, பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புளியை நன்றாக ஒன்றரை டம்ளர் நீரில் கரைத்துக்கொண்டு அதில் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டுக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொண்டு, கசகசாவையும் வைத்து அம்மியில் நன்றாக வெண்ணெய் போல அரைக்கவும். அரைப்பதற்கு தண்ணீருக்குப் பதிலாக, அந்த புளி தண்ணீரை விட்டு விட்டு அரைக்கவும். நன்றாக வெண்ணெயாய் அரைத்து அந்த புளி தண்ணீருடன் கலந்து கொள்ளவும். அடுப்பில் அடி கனமான எவர்சில்வர் பாத்திரம் வைத்து, எண்ணெயை விட்டு வெங்காயத்தையும் கத்தரிக்காயையும் போடவும். கத்தரிக்காய் நன்றாக கைக்கு அமுங்கியவுடன், அந்த புளித்தண்ணீரை கொட்டி விடவும். நன்றாக கொதித்து 5வது நிமிடத்தில் இறக்கி விடவும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு