அம்மா » சமையல் » பருப்புப் பொடி

பருப்புப் பொடி

11-07-28 12:51 0 கருத்து உங்கள் கருத்து
Pin It

முறை 1

தேவையானவை:

1. துவரம் பருப்பு – 2 கோப்பை
2. மிளகாய் வற்றல் – 8
3. மிளகு – 1 தேக்கரண்டி
4. சீரகம் – அரை தேக்கரண்டி
5. பெருங்காயம் – 1 தேக்கரண்டி அளவு பொடித்தது.
6. உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1. எல்லாச் சாமான்களையும் எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுக்கவும்.
2. பிறகு உப்புச்சேர்த்து பொடிக்கவும்
3. காரம் அதிகம் வேண்டாதவர்கள் மிளகாயை இன்னும் குறைத்து சேர்க்கலாம். (இந்த பொடியில் மிளகாயை சேர்க்காமல், வெறும் மிளகு சேர்த்தும் பொடிக்கலாம்)

முறை 2

தேவையானவை:

1. துவரம் பருப்பு – 1 கோப்பை
2. கடலைப் பருப்பு – 1 கோப்பை
3. பாசிப் பருப்பு – 1 கோப்பை
4. உளுத்தம் பருப்பு – 1 கோப்பை
5. மிளகு – 4 தேக்கரண்டி
6. சீரகம் – 4 தேக்கரண்டி
7. மிளகாய் வற்றல் – 12
8. பெருங்காயம் – 1 தேக்கரண்டி அளவு பொரித்தது.
9. உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1. சிறிதளவு நெய் வைத்து கடுகு தாளித்து அதிலேயே பெருங்காயத்தை போட்டு பொடிக்கவும்.
2. பிறகு எல்லாப் பருப்புக்களையும், எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்புக்கள் காந்தாமல் நல்ல வாசனை வரும்வரை வறுக்கவும்.
3. பிறகு எல்லா சாமான்களையும் ஒன்றாக கலந்து திட்டமாக உப்பு சேர்த்து பொடிக்கவும்.
4. விருப்பப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி உதிர்த்த கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து அதனையும் பொடிக்கலாம்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு