அம்மா » சமையல் » கோழி-பாதாம் பசந்தா

கோழி-பாதாம் பசந்தா

11-07-09 12:13 0 கருத்து உங்கள் கருத்து

தேவையான பொருட்கள்:

கோழி – 4
மிளகாய் வற்றல் – 15 கிராம்
தனியாப்பொடி – 10 கிராம்
வெங்காயம் – 225 கிராம்
நெய் – 115 கிராம்
இஞ்சி – 60 கிராம்
பூண்டு – 30 கிராம்
மஞ்சள்பொடி – 55 கிராம்
தயிர் – 55 கிராம்
முந்திரி – 55 கிராம்
பாதாம் பருப்பு – 55 கிராம்
பன்னீர் – 2 டீகரண்டி
முட்டை – 2
உப்பு – தேவைக்கேற்ப
“வௌ்ளி ரேக்” – 4
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
கரம் மசாலா – சிறிதளவு
தக்காளி – 4
இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிருஞ்சி இலை – வாசனைக்காக சிறிதளவு
மிளகுப்பொடி – ஒரு சிட்டிகை
பால் – 15 மில்லி

செய்முறை:

கோழியை அலம்பி சுத்தம் செய்து, நான்கு துண்டுகளாக்கி எலும்புகளை நீக்கி, தயிரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அந்த துண்டுகளை எடுத்து சலித்த மாவில் போட்டு உருட்டிய பின், முட்டையை அடித்து சிக்கன் துண்டுகளை உருட்டி அதன் மீது முந்திரி, பாதாம் பருப்புகளை வைத்து, நெயில் போட்டு மூழ்க வைத்து பழுப்புநிறமாக ஆகும் வரையில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.

வெங்காயத்தை நெய்யுடன் சேர்த்து வதக்கி, அதில் அம்மியில் அரைத்த இஞ்சி, பூண்டு, கரம் மசாலா கலவையை சேர்த்து சில நிமிடங்கள் வேகவிடவும். மிளகாய் வற்றல் தனியாப்பொடி போட்டுவேகும் போது, நெய் தனியாக பிரிந்தவுடன் கடைந்த தயிரை சேர்த்து வேக விடுங்கள்.

இவை வெந்த பின் ஏற்கனவே பொரித்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை அதில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

சிறிதளவு பால் விட்டு முந்திரிப் பருப்பை நன்றாக விழுது போல் அரைத்து அதையும் கோழியுடன் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் வேகவிடவும். பன்னீரையும் ஊற்றி விடவும்.

எல்லாம் கலந்து வெந்தவுடன் அவற்றை ஒரு தட்டில் கொட்டி “வௌ்ளி ரேக்குகள்” தோலுரித்்த பாதாம் பருப்பு ஆகியவற்றை வரிசையாக வைத்து, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, தக்காளியை நான்கு மூலையிலும் வைத்து அழகு படுத்தவும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு