அம்மா » சமையல் » அங்காயப் பொடி

அங்காயப் பொடி

11-07-30 13:31 0 கருத்து உங்கள் கருத்து
Pin It

தேவையானவை:
1. தனியா – அரை கோப்பை
2. வேப்பம் பூ – கால் கோப்பை
3. சுண்டைக்காய் – 20
4. மிளகு – 2 தேக்கரண்டி
5. சீரகம் – 4 தேக்கரண்டி
6. சுக்கு – சிறு துண்டு
7. வெல்லம் – உதிர்த்தது 1 மேசைக்கரண்டி
8. மிளகாய் வற்றல் – 6
9. கறிவேப்பிலை – உதிர்த்தது 1 பிடி
10. பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி அளவு
11. உப்பு – திட்டமாக

செய்முறை:
1. முதலில் பெருங்காயத்தை பொரித்துக் கொள்ளவும்
2. கறிவேப்பிலையை உதிர்த்து சுத்தம் செய்து வெறும் இலுப்பச்சட்டியில் வறுத்துக் கொள்ளவும்
3. உப்பையும் இலேசாக வறுத்துக் கொள்ளவும்
4. பிறகு மற்ற எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். (சுண்டைக்காய், வேப்பம் பூ என்பன தீய்ந்து விடாமல் பக்குவமாக வறுக்க வேண்டும்)
5. எல்லா சாமான்களையும் ஒன்றாக கலந்து, திட்டமான உப்புடன் சேர்த்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொடி செய்யும் பொழுது, வெல்லமும் சேர்த்துக்கொண்டு, பொடி செய்ய வேண்டும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு